அக்கரைப்பற்றில் ஊரடங்கு சட்டத்தை மீறிய மூவர் பொலிசாரால் கைது!


வி.சுகிர்தகுமார்
ஊரடங்கு சட்டம் நேற்றிரவு முதல் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரையும் நேற்றிரவு கைது செய்ததாக தெரிவித்த அக்கரைப்பற்று பொலிசார் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.
நாடளாவிய ரீதியில் ஊடரங்கு சட்டம் கடுமையான முறையில் அமுல்படுத்தப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று பிரதேசத்திலும் பொலிசார் தீவிர கண்காணிப்பிலும் சோதனை நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
அக்கரைப்பற்று பிரதேசம் யாவும் அமைதி நிலவுவதுடன் வீதிகள் யாவும் வெறிச்சோடிக்காணப்பட்டன.
அத்தியாவசிய நடவடிக்கையில் ஈடுபடும்; சில வாகனங்களும் நபர்களும் வீதியில் பயணிக்க பொலிசாரால் அனுமதிக்கப்பட்டனர்.
இதேநேரம் அம்பாரை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆழ்கடல் மீனவர்கள் தொழிலுக்கு செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.





